Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / என்னை கொலை செய்ய திட்டமிடும் இந்தியா! மைத்திரி

என்னை கொலை செய்ய திட்டமிடும் இந்தியா! மைத்திரி

ஜனாதிபதி இதனை தெரிவித்தவேளை நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் என பெயர் குறிப்பிடவிரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இதனை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஊடக பிரிவினை தொடர்புகொண்டவேளை இது குறித்து ஆராய்ந்து கருத்து தெரிவிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்தனர் எனினும் பின்னர் தொடர்புகொள்ளவில்லை

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற் விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.இலங்கை அரசியல் தலைவர் ஒருவர் இந்திய புலனாய்வு அமைப்பின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது இது முதல்தடவையில்லை.

2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தோல்விக்கு இந்தியாவின் ரோ அமைப்பே காரணம் என தெரிவித்திருந்தார்.

தன்னை கொல்வதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கம் அக்கறையின்றி உள்ளது என தெரிவித்தவேளையே சிறிசென இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தன்னை கொலை செய்யும் சதி முயற்சி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை ரோ அமைப்பை சேர்ந்தவராகயிருக்கவேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன சிஐஏ என்ன செய்கின்றது என்பது டிரம்பிற்கு தெரியாமலிருப்பதை போன்று இந்திய பிரதமருக்கு இது தெரியாமலிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv