பெரும் கூட்டணியை அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றோம். அதற்காகத் தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் அழைத்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்புக் குழுக்களையும் இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக சுதந்திரக் கட்சி எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பின்னரே அரச தலைவர் தேர்தல் நடைபெறும். பின்னர் பொதுத் தேர்தல் நடைடபெறும். எந்தத் தேர்தல் நடந்தாலும் அதை எதிர்கொள்ள சுதந்திரக் கட்சி தயராக உள்ளது. ஆனால் நாம் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ளவது தொடர்பாகவே ஆலோசிக்கின்றோம்.
நாம் தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் அழைத்துள்ளோம். அவர்கள் விரைவில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை நாட் டுக்குப் பொருத்தமற்றது. எமது நாட்டின் வளங்களை ஏனைய நாடுகளுக்கு விற்பதை அனுமதிக்க முடியாது.
பொதுமக்கள் முன்னணிக் கட்சியும் கூட் டணி அமைத்தே எதிர்வரும் தேர்தல்களைச் சந்திக்கும் என்று முன்னாள் அமைச் சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் சின்னம் தொடர்பாகப் பல கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் இது தொடர்பாக இணக்கப்பாடு எட்டலாம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
பொதுமக்கள் முன்னணி கட்சியின் சில உறுப்பினர்கள் மொட்டுச் சின்னத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கின்றனர். தமது கருத்துக்களும் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காகவே அப்படிக் கூறுகின்றனர் என்றார்.