தென் மாகாண பாடசாலைகளுக்கான கடமை நேரம், மேலும் ஒரு மணித்தியாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, காலை 7.30 மணிக்கு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி, பி.ப 2.30 மணிக்கு நிறைவுப் பெறும் என, ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்த அறிவிப்பு, சகல கல்வி வலயங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், சில சங்கங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மாணவர்களின் நலன்கருதி இந்தப் பணியை முன்னெடுத்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தின் சில பாடசாலைகளில், தற்போது மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளதுடன், பெரும்பாலான பாடசாலைகளில், 2 ஆம் தவணை பாடவிதானங்கள் இதுவரை நிறைவுச் செய்யப்படாதுள்ளதனால், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.