Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த

இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த

இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த

நாட்டில் முஸ்லீம் தீவிரவாதத்தை அடியோடு இல்லாதொழிப்பதற்கு இராணுவத்தினருக்கு முழுமையான ஒத்துழைப்பும், பூரண அதிகாரமும் வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் இராணுவ கல்லூரி பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர்இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் அமைப்பினை முழுமையாக இல்லாதொழித்த இராணுவத்தினருக்கு ஆயுதமேந்திய தலைவராக செயற்பட்டமையினை இட்டு சர்வதேச மட்டத்தில் தாம் பெருமையடைந்துள்ளதாக கூறிய மகிந்த, இதன் சிறப்பு இராணுவத்தினரையே சாரும் என்றும், என்றும் பிரதமர் மகிந்த தெரிவித்துள்ளார்.

தமது இந்த வெற்றியானது சர்வதேசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் எஸ். பி. ஐ நிறுவனம் விடுதலை புலிகள் அமைப்பு பலம் வாய்ந்த ஒரு தீவிரவாத அமைப்பு என்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

விடுதலை புலிகளின் தாக்கம் அமெரிக்காவில் இடம் பெறவில்லை ஆனால் அவர்கள் அந்த அமைப்பை சர்வதேச பலம் வாய்ந்த அமைப்பாக கருதிய நிலையில், 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார்.

அதுவரை காலமும் 30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர முடியாது என பல நாடுகளின் இராஜதந்திரிகளும் குறிப்பிட்டதுடன், முடியாத ஒரு விடயத்திற்கு முயற்சிகளை மேற்கொள்வது பயனற்றது என தமக்கு எடுத்துரைத்ததாகவும் மகிந்த தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்துயுத்தத்தை விரைவாக முடிவிற்கு கொண்டு வந்து அபிவிருத்தியில் முன்னேற வேண்டும் என்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டடு இராணுவம், புலனாய்வு பிரிவு பலப்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்போது பாதுகாப்பு செயலாளராக கோத்தபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டு யுத்தம் துரிதகரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று அவரை நாட்டு தலைவராக மக்கள் தெரிவு செய்துள்ளமை பாரிய வெற்றி எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv