விசுவமடு புதிய புன்னை நீராவியடிப் பகுதியில் கால் நடைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு, விசுவமடுப் பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் வயல்நிலங்களில் தமது கால்நடைகளை மேய்ச்ச லுக்காக அனுப்பி விடுகின்றார்கள். இதனால் நெற்பயிர்களைக் கால்நடைகள் மேய்கின்றன.
வயல் நிலங்கள் அழிவடைந்து செல்கின்றன. கால்நடை உரிமையாளர்களுக்குத் தெரியப்படுத்தியும் அவற்றைக் கட்டுப்படுத்த எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என வயல்நில உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
புன்னைநீராவியடிப் பகுதியில் 30 ஏக்கர் வரையில் வயல் விதைக்கப்பட்டுள் ளது. இங்கு அதிகமானவர்கள் வீடுகளில் கால்நடைகளை வளர்க்கின்றார்கள். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மேலும் தெரிவித்தனர்.