Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / இன்றும் சு.கவுக்கு நானே தலைவர்! – மார்தட்டுகிறார் மஹிந்த

இன்றும் சு.கவுக்கு நானே தலைவர்! – மார்தட்டுகிறார் மஹிந்த

இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே எனவும், தன்னை அந்தப் பதவியிலிருந்து எவரும் விலக்கவும் இல்லை எனவும், தான் விலகவும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தன்னை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டதால் அந்தப் பதவி தனக்கே உரித்தாகிறது என வேறொருவர் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“என்னையும் எனது குடும்பத்தினரையும் பழிவாங்குவதற்காக பல்வேறு பொய் அவதூறுகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டும் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்துகொண்டிருப்பவர்களும் தாங்கள் பரிசுத்தமானவர்கள் என்று பொய் வேடம் போட்டுக்கொண்டு தங்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களால் மக்களை ஏமாற்றமுடியாது.
என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் அவதூறுகளைச் சுமத்திக்கொண்டிருக்கும் ஒருசிலர் மீது நான் மானநஷ்ட வழக்கைத் தொடர முடிவுசெய்திருக்கிறேன்” – என்று தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv