வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகைச் சுடரை பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து யாராவது ஒருவர் ஏற்றட்டும்.
நான் ஏற்றவே மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“வடக்கு மாகாண சபை ஒருங்கிணைக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகைச் சுடரை போரால் பாதிக்கப்பட்ட அல்லது உறவுகளைப் பறிகொடுத்த தரப்புக்களில் இருந்து யாராவது ஒருவர் அதனை ஏற்ற வேண்டும்.
முதன்மை ஈகச் சுடரை நான் ஏற்றவே மாட்டேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.