Friday , October 17 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் !

ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் !

அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலின் போது தனது கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அறிவிப்பதாக ரஜினி கூறியுள்ளார். மேலும், திமுக தலைவர் கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

மேலும், திரைத்துறையிலும் அவருக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. அவருக்கு பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால் “கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவித்துள்ளார். அரசியல் என்பது சமூக சேவைதான். தலைவர் இறங்கிவிட்டார். நானும் அவருக்கு ஆதரவாக அத்தனை தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து அவருக்கு உதவியாக இருப்பேன்” என விஷால் கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv