Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தீர்­வுக்கு முயற்­சித்­தேன் – மகிந்த

தீர்­வுக்கு முயற்­சித்­தேன் – மகிந்த

தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­யல் தீர்­வொன்றை வழங்­கு­வ­தற்­குப் பல வழி­க­ளி­லும் நாம் முயற்­சித்­தோம்.

அர­ச­மைப்­பில் மாற்­றம் கொண்­டு­வ­ரு­வ­தற்­கும் உத்­தே­சித்­தி­ருந்­தோம். ஆனால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இத­ய­சுத்­தி­யு­டன் செயற்­ப­டா­த­தா­லேயே அந்த முயற்­சி­கள் கைகூ­ட­வில்லை.

இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-,

தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­யல் தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டி­யி­லி­ருந்து நான் இன்­னும் பின்­வாங்­க­வில்லை. அர­சி­யல் தீர்வை நோக்­கிப் பய­ணிப்­ப­தற்­கா­கத் என்­னால் விடுக்­கப்­பட்ட அழைப்­பு­களை சம்­பந்­தன் நிரா­க­ரித்தே செயற்­பட்­டார்.

தாமரை மொட்டு சின்­னத்­தில் எனது தலை­மை­யின்­கீழ் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி நாட்­டின் அர­சி­யல் சக்­தி­யாக மாற்­ற­ம­டை­யு­மாக இருந்­தால் தமி­ழர்­கள் மட்­டு­மன்றி, சிங்­க­ள­வர்­கள் மற்­றும் முஸ்­லிம்­கள் ஏற்­றுக்­கொள்­ளும் அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வேன்.

புதிய அர­ச­மைப்பை இந்த அரசு உரு­வாக்­கி­னா­லும் அனைத்து இன மக்­க­ளின் சம்­ம­தத்­த­டன் மட்­டுமே அதனை மேற்­கொள்­ள­வேண்­டும் – என்­றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv