கிளிநொச்சியையும், முல்லைத்தீவையுமே மகிந்த ராஜபக்ச அரசு விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டது. யாழ்ப்பாணத்தை மீட்டது நான்தான். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
ஈவெயாங்கொட பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
போரை வென்றதாகக் கூறுகின்றார்கள். போரின் மூன்றில் இரண்டு பங்கை யார் முடித்தது. யார் யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து கைப்பற்றியது?
எனது அரசு ஆட்சியை பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை மீட்டோம். வடக்கில் புலிகள் வசமிருந்த மூன்றில் இரண்டு பகுதியை நாம் கைப்பற்றிக்கொண்டோம்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மட்டுமே எஞ்சியிருந்தது. அவை இரண்டையுமே ராஜபக்ச அரசு கைப்பற்றியது. நான் செய்த பிழை என்னவென்றால் வானளவு உயரத்திற்கு பல கோடி ரூபா செலவிட்டு போர் வெற்றி தொடர்பில் கட்அவுட்களை அமைத்துக் கொண்டு பரப்புரை செய்யவில்லை. அதனையே சிங்கள பௌத்தர்களின் பண்பு என்று நான் கருதுகின்றேன் – என்றார்.