நான் அரசியல்வாதிகளின் கைக்கூலி அல்லன். தியானம் செய்து எஞ்சியுள்ள காலத்தை கடப்பதற்கு எடுத்த முடிவை மாற்றிவிட்டேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் இன்று தலதா மாளிகைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்,
சிறையிலிருந்து வெளியேறிய பின்னர், எதிர்காலம் குறித்து அறிவிப்பொன்றை விடுத்திருந்தேன். இந்த அறிவிப்பால் இளைஞர்கள் மனம் நொந்து விட்டார்கள். ஓய்வு வேண்டாம், வாருங்கள் என அழைப்பு விடுத்தனர்.
எனவே, இளைப்பாறாது, நாட்டுக்காகவும், சாசனத்துக்காகவும் தொடர்ந்தம் குரல் எழுப்புவேன். அன்று எடுத்த தீர்மானத்தை தற்போது மாற்றிக்கொண்டுள்ளேன்.
நான் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் கைக்கூலி அல்லன். அப்படி இருந்திருந்தால் சிறையில் அடைத்திருப்பார்களா என ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.