Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரி கொலை சதிக்கும் எனக்கு தொடர்புமில்லை!

மைத்திரி கொலை சதிக்கும் எனக்கு தொடர்புமில்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி முயற்சிகளுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் கடுமையாக நிராகரித்துள்ளார்

சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவலை வெளியிட்ட நாமல்குமார ஒரு புலனாய்வு உத்தியோகத்தர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா ஜனாதிபதி அவரிடமிருந்தே தகவல்களை பெறுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்

நாமல் குமார தற்போது பொதுஜனபெரமுனவில் இணைந்து தேர்தலில் போட்டியிட முயல்கின்றார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றத்திற்கு அழைக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv