தனது குருவான பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தமது இமயமலைப் பயணம் அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மாறுபட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இமாச்சல பிரதேச மாநிலம் பாலம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் யாத்ரீகனாக இமயமலை வந்துள்ளதால், அரசியல் பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.