தேவையானப் பொருட்கள்:
மீன் துண்டுகள் – கால் கிலோ.
லெமன் – 2
மஞ்சள் தூள், சீரகத் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
சோளமாவு – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை:
மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், லெமன் சாறு, சீரகத் தூள், இஞ்சி, பூண்டு விழுது, சோளமாவு, உப்பு கலந்து கொள்ளவும். இதை மீன் துண்டுகளின் மீது 1 மணி நேரம் ஊற விடவும். பிறகு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.