Thursday , April 25 2024
Home / சமையல் குறிப்புகள் / மிக்ஸ்டு வெஜிடபுள் சாலட் எப்படிச் செய்வது

மிக்ஸ்டு வெஜிடபுள் சாலட் எப்படிச் செய்வது

தேவையான பொருட்கள்

கேரட் – 1, பெரிய வெங்காயம் – 1/2,
பெங்களூர் தக்காளி – 1,
முற்றாத வெள்ளரிக்காய் – 1,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய முட்டைக்கோஸ் – 1/4 கப்,
நறுக்கிய மல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கழுவி சுத்தம் செய்த கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், முட்டைக்கோஸ், மல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
குறிப்பு: வெங்காயம் பச்சையாக சாப்பிடப் பிடிக் காதவர்கள், வெங்காயத்தை லேசாக வதக்கிப் பயன்படுத்தலாம்.

Check Also

பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா?

TREDY FOODS உடன் சேர்ந்து கோடையை கொண்டாடுவோம் பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா? வெயில் காலத்தில உப்பு, புளி, காரம் …