Monday , November 18 2024
Home / சமையல் குறிப்புகள் / மதுரை மிளகாய் சட்னி செய்வது எப்படி

மதுரை மிளகாய் சட்னி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் – 15
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
கருவேப்பிலை – 3 இணுக்கு
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 குழிகரண்டி அளவு


செய்முறை:

முதலில் மிளகாயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி பூண்டு, கருவேப்பிலை உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் வைத்து கொள்ள வேண்டும்.

பின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்துள்ளதைப் கலவையை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

சுவைாயன மிளகாய் சட்னி ரெடி

இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Check Also

பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா?

TREDY FOODS உடன் சேர்ந்து கோடையை கொண்டாடுவோம் பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா? வெயில் காலத்தில உப்பு, புளி, காரம் …