தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 1 கப்,
வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 4, உப்பு – தேவைக்கு,
அலங்கரிக்க புதினா இலை – தேவைக்கு,
தண்ணீர் – 1½-2 கப்.
எப்படிச் செய்வது?
ஒரு குக்கர் பேனில் வெண்ணெயை உருக்கி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கி, அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து வேகவைத்து, வெந்ததும் இறக்கவும். புதினா இலையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
குறிப்பு: சீரக சம்பா அரிசியிலும் செய்யலாம்.