வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள இராணுவத்தினரை அகற்ற முகாமுக்கு அண்மையில் குப்பைகளை கொட்டினால் எழுப்பமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யோசனை முன்வைத்துள்ளார்.
வவுனியா மாவடட அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் வவுனியா பம்பைமடு பகுதியில் குப்பை கொட்டபடுவது தொடர்பில் பேசப்பட்டது.
தற்போது குப்பைகொட்டும் பகுதிக்கு அண்மையில் இராணுவமுகாம் ஒன்று இருக்கிறது அதனை அகற்றித் தந்தால் அவ் விடத்தில் குப்பை கொட்டமுடியும் என்று தெற்குத் தமிழ்பிர தேச சபைத் தலைவர் து.நடராயசிங்கம் கூறினார்.
இதன்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் இராணுவ முகாமுக்கு அண்மையில் குப்பைகளை கொட்டினால் இராணுவத்தையும் எழுப்பமுடியும் என்று நகச்சுவையாக கூறியிருந்தார்.