Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சுமந்திரனால் ஹிஸ்புல்லாவிற்கு நெருக்கடி ஆரம்பம்!

சுமந்திரனால் ஹிஸ்புல்லாவிற்கு நெருக்கடி ஆரம்பம்!

இலங்கையிலுள்ள 130 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, எதிர்வரும் நாட்களில் இந்நடவடிக்கை கட்டுப்படுத்தப்படும் என நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு ஆளுநருக்கும் தௌஹீத் ஜமாத்திற்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, யார் மீதாவது சந்தேகம் முன்வைக்கப்பட்டால் அதுதொடர்பாக கவனஞ்செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

அவர்களின் அதிகாரங்கள் மற்றும் பதவிகள் தொடர்பாக அக்கறை செலுத்தப்பட மாட்டாதென்றும் கூறினார்.

https://www.youtube.com/watch?v=ySC_lD3I8hc

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv