Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மழை பெய்து வருவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv