எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஹர்த்தால்!
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும்,யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் வர்த்தக நிலையங்களை பூட்டியும், வாகன போக்குவத்துக்களை நிறுத்தியும் மக்கள் பேராதரவு வழங்கியுள்ளனர்.
அத்துடன் எழு தமிழை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணத்திலும் பூரண ஹர்த்தாலை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள், பொது சந்தைகள் பூட்டியிருந்தாலும் ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறந்து வழமைபோல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன் வாகன போக்குவார்த்துக்கள் மற்றும் பேருந்துகள் சேவைகளும் வழமைபோல் தமது சேவையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேசத்திற்கு தமிழினத்தின் பிரச்சனைகளை எடுத்து சொல்லும் முகமாக யாழில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு எழுக தமிழ் பேரணி இடம்பெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியில் இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.