Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஹெச் ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது: எஸ் வி சேகர்

ஹெச் ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது: எஸ் வி சேகர்

பெண் பத்திரிக்கையாளரகளைப் பற்றி தவறானக் கருத்துகளைப் பகிர்ந்ததற்காக சர்ச்சையில் சிக்கினார் நடிகர் எஸ் வி சேகர். இதனையடுத்து அவரைக் கைது செய்யப் போலீஸ் தனிப்படை அமைத்துள்ளதாகவும் அதனால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

கடந்த சில காலங்களாக ஊடகங்களில் தலை காட்டாமல் இருந்த எஸ் வி சேகர் தற்போது மீண்டும் பழைய மாதிரி வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னை அடையாறில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது தொன்னூறாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது.
‘ஹெச் ராஜா பேசியதாகக் குறிப்பிடப்பட்ட வார்த்தை ஒரு வீடியோவில் உள்ளது. இன்னொரு வீடியோவில் இல்லை. அவர் பேசியது வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டு நவீன தொழில்நுட்பத்தில் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து தடவியல் துறைதான் ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டும். ராஜா இந்த வழக்கினை எதிர்கொள்வார்’ எனப் பதிலளித்தார்.

ஹெச் ராஜா கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல்துறையையும் நீதிமன்றத்தையும் தவறாகப் பேசினார் என்று அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv