Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கங்கை அமரனிடம் அடித்து பிடுங்கிய பங்களாவை ஒப்படை: தினகரனுக்கு எச்.ராஜா

கங்கை அமரனிடம் அடித்து பிடுங்கிய பங்களாவை ஒப்படை: தினகரனுக்கு எச்.ராஜா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு பூஜையில் கலந்துக்கொண்டார் பாஜக தலைவர் எச்.ராஜா. இவர் எப்போதும் சர்ச்சை கிளப்பும் வகையில் பேசக்கூடியவர். தற்போதும் அதே மாதிரிதான் பேசியுள்ளார்.

எச்.ராஜா கூறியது பின்வருமாறு, காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஏதாவது ஒரு அமைப்போ ஏற்படுத்தும்போது, அந்த அமைப்பில் கருத்தொற்றுமையுடன் 4 மாநிலங்களும் பங்குபெற வேண்டும்.

ஆனால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை இதனால் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக குறை கூறுகின்றனர்.

சென்னைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருப்பு கொடி காட்டினர். ஆனால், மறுநாள் அதே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு ஆளுநரிடம் மனுகொடுப்பது வேடிக்கையாக உள்ளது.

பாஜக வன்முறையை தூண்டுகிறது என கூறும் தினகரன், கங்கை அமரனிடமிருந்து அடித்து பிடுங்கிய சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைத்து தினகரனின் சாத்வீகத்தை வெளிப்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv