Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா திட்டம் ?

எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா திட்டம் ?

எச்-4 விசாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா திட்டம் ?

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பணிக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவைத் தொடர்ந்து,பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் எச்-4 விசாவுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பை தடை செய்யக் கோரி அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக எச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்விசாவின் மூலம் வரும் பணியாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு எச்-4 என்ற விசா வழங்கப்படுகிறது. எச்-4 விசாவின் மூலம் வருபர்களும் அமெரிக்காவில் வேறு பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய டிரம்ப் அரசால் விதிக்கப்பட்டுள்ள எச்1-பி விசா மீதான கட்டுப்பாடுகள் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை வெகுவாக பாதித்துள்ள நிலையில், எச்-4 விசாவின் மூலம் அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு வேலை வாய்ப்பை குறைக்க டிரம்ப் அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, எச்-4 விசாவில் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் எனஅமெரிக்க நீதித்துறை சார்பில், வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் எச்- 4 விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …