Monday , November 18 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / அதிக இடங்களை கைப்பற்றி பாரதீய ஜனதா ஆட்சியை தக்க வைக்கும்

அதிக இடங்களை கைப்பற்றி பாரதீய ஜனதா ஆட்சியை தக்க வைக்கும்

குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது. 182 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்திடும் என தேர்தலுக்கு பின் நடந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி டுடேஸ் சாணக்யாவின் கருத்து கணிப்பில் பாரதீய ஜனதா 135 இடங்களையும், காங்கிரஸ் 47 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வி.எம்.ஆர். நடத்திய கருத்து கணிப்பில் பாரதீய ஜனதா 109 இடங்களையும், காங்கிரஸ் 70 இடங்களையும் மற்றும் பிற கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று சி. ஓட்டர் நடத்திய கருத்து கணிப்பில் பாரதீய ஜனதா 108 இடங்களையும், காங்கிரஸ் 74 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆக்சிஸ் நடத்திய கருத்து கணிப்பில் பாரதீய ஜனதா 113 இடங்களையும், காங்கிரஸ் 68 இடங்களையும் மற்றும் பிற கட்சிகள் 1 இடத்தினை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv