Monday , November 18 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / பிரான்ஸ் நாட்டில் ஒரு கின்னஸ் சாதனை

பிரான்ஸ் நாட்டில் ஒரு கின்னஸ் சாதனை

பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண் சுமார் 8 கிமீ நீளத்தில் உள்ள ஆடையை அணிந்து திருமணம் செய்து கொண்டார்.

உலகிலேயே இதுதான் நீளமான திருமண ஆடை என்ற கின்னஸ் சாதனையை இந்த ஆடை அடைந்துள்ளது

கின்னஸ் சாதனை பெற்ற இந்த ஆடையின் நீளம் 8095 மீட்டர். அதாவது எட்டு கிலோமீட்டருக்கும் மேல். இந்த ஆடையை அமைக்க 2 மாதங்கள் சுமார் 15 ஊழியர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் 1203.9 மீட்டர் நீள திருமண உடை தயாரிக்கப்பட்டதே கின்னஸ் சாதனையாக இருந்தது.

தற்போது அந்த சாதனை தகர்க்கப்பட்டு உடை புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் இந்த ஆடையை சிறிது சிறிதாக வெட்டி ஏலம் விடப்போவதாகவும், இதில் கிடைக்கும் பணத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கப்போவதாகவும் இந்த ஆடையை வடிவமைத்த தன்னார்வ நிறுவனம் கூறியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv