குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் தீ விபத்து – 19 பேர் பலி
குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
குவாத்மாலா நாட்டில் சான் ஜோஸ் நகரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இல்லம் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இந்த இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடும் முயற்சி மேற்கொண்டனர்.
இந்த கோர விபத்தில் 19 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும், 25 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக சான் ஜோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இல்லத்தில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என மானவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணத்தை தேடி வரும் போலீசார், தீ விபத்தின் போது பல மாணவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.