Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு! போக்குவரத்து ஸ்தபிக்கும் அபாயம்

இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு! போக்குவரத்து ஸ்தபிக்கும் அபாயம்

இலங்கையில் தரமற்ற எரிபொருள் இறக்குமதி மூலம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாடு பூராகவும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்…

இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

அதற்கமைய உந்துருளி ஒன்றுக்கு 2 லீற்றர் பெற்றோலும், முச்சக்கர வண்டிக்கு 3 லீற்றர் பெற்றோலும், சிற்றூர்ந்துகளுக்கு 20 லீற்றர் பெற்றோலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ம் திகதி 40000 மெற்றிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதும், அது தரமற்ற நிலையில் காணப்படுவதால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றீடான எரிபொருட்கள் விரைவில் நாட்டுக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்கா பெற்ரோலிய கூட்டுத்தாபனம் 30000 மெற்றிக் தொன் எரிபொருளை இறக்குமதி செய்யவுள்ளது. எரிபொருளை ஏற்றிய கப்பல் நாளை இரவு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv