ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு!
இன்றையதினம் புதிய பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு இராணுவ கௌரவ அணிவகுப்பு நிகழ்வுகளை நிகழ்த்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
சாதாரண சம்பிரதாயத்திற்கு அமைய ஜனாதிபதி குதிரைப்படை வீரர்களுடன் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க இருந்த நிலையில் , கோட்டாபய ராஜபக்ஷ அதனையும் ரத்து செய்துள்ளார்.
இதேவேளை , புதிய பாராளுமன்ற சபையின் தொடக்க விழாவை எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.