கடும் அதிருப்தியில் கோத்தபாய !
நாவலப்பிட்டியில் பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவை தேர்தல் பிரச்சார பகுதிக்கு செல்ல ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டதை அடுத்து அவரின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட கோத்தபாய தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/GotabayaR/status/1192153017002291200
அதில்,
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தொடர்பில் வருத்தமடைகின்றேன் என்றும், இது தொடர்பில் உரிய பிரிவுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும். சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதனை முதன்மையாக கருதும் எனது கொள்கையை மீண்டும் உறுதி செய்கிறேன் என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் சில தினங்கள் உள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.