கோத்தாவின் உடல் நிலை மோசம்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தொடர்பில் போலியான பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோத்தாபய மீது சேறுபூசுவதற்காக சமூக ஊடகங்களை சிலர் பயன்படுத்துகின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .
அந்தவகையில் கோத்தாபய உடல்நலப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளார் என சித்தரிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் படங்களை வெளியிடுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கோத்தாபயவின் உடல்நிலைக்கு ஏதாவது பாதிப்பா என கேட்டு தனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் மகிந்தராஜபக்ச கூறியுள்ளார்.
எனினும் பொதுமக்களை இவ்வாறன பொய் பிரச்சாரங்கள் மூலம் தவறாக வழிநடத்தமுடியாது எனவும் மகிந்த ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.