தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்ளவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
“இன்று எங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நாம் அப்படியானவர்கள் அல்லர். இந்த நாட்டை மீட்டெடுக்கவே களத்தில் இறங்கியுள்ளோம்.
பயங்கரவாதிகளிடமிருந்து விரைவில் நாட்டை மீட்டெடுப்போம். இது சிங்கள பௌத்த நாடு என்பதை அனைவரும் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும். அந்த நிலையை நாம் விரைவில் ஏற்படுத்துவோம்.
ஆட்சி மாற்றம் வேண்டுமா? இல்லையா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். ஆனால், பயங்கரவாதிகளிடமிருந்து பௌத்த மதகுருக்கலான நாம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இது உறுதி” என மேலும் தெரிவித்துள்ளார்.