குளிப்பதற்கு மொபைல் போனை எடுத்துகொண்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…
இந்த உலகம் முழுவதும் பலரும் பல்வேறு விதமாக பரிதாபமாக தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் கைப்பேசியின் ஆதிக்கத்தால் பலர் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைப்பேசியின் மூலமாக மின்சாரம் தாக்கி, ரஷிய இளம்பெண் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியாவில் உள்ள கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சார்ந்த இளம் பெண்ணின் பெயர் எவ்ஜீனியா சுல்யாதியேவா(26). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நாட்களுக்கு முன் வீட்டின் உள்ள குளியறைக்கு, குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்த சமயத்தில், தனது கைப்பேசியையும் உடன் எடுத்து சென்றுள்ளார்.
குளியலறையில் இருக்கும் மின்சார பொத்தானில் கைப்பேசிக்கு மின்பகிர்வு செய்து கொண்டு இருந்த சமயத்தில்., எதிர்பாராத விதமாக கைபேசி தவறி தண்ணீர் நிறைந்த குளியல் தொட்டியில் விழுந்துள்ளது. இதனையடுத்து மின்சாரம் தண்ணீர் முழுவதும் பாய்ந்து., பரிதாபமாக குளியல் தொட்டிக்குலேயே உயிரிழந்துள்ளார்.
இவர் குளிக்க சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரத்தால்., சந்தேகமடைந்த தாயார் குளியறைக்குள் சென்று பார்த்த சமயத்தில்., மகள் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் எவ்ஜீனியா சுல்யாதியேவாவின் உடலை மீட்டனர்.
பின்னர் இவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.