மஸ்கெலிய – குலெனுஜி தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இம் முறை கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ள மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தாயாரின் சேலையினால் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலே மாணவி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சடலம் குறித்த பிரேத பரிசோதனை இன்று டிக்கோயா மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.