யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் சாரதி ஒருவர் மீது வாள்வெட்டு குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உந்துருளியில் வருகைதந்த குழுவொன்றே இவ்வாறு வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.