Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழில் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள்! கிறீஸ் பூதமா என சந்தேகம்

யாழில் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள்! கிறீஸ் பூதமா என சந்தேகம்

யாழ். அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று நள்ளிரவு தீ மூட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக அராலிப் பிரதேசத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்கு கற்கள் எறியப்படுவதுடன், வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளும் தட்டப்படுகின்றன.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அயலிலுள்ள அவரது தம்பியின் வீட்டு ஜன்னல்களும் தட்டப்பட்டுள்ளன. இந்த வேலைகளை செய்தது கிறீஸ் பூதமா அல்லது விசமிகளா என்று நாங்கள் குழம்பிப் போயுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

எனினும், அண்மைக்காலமாக அராலிப் பிரதேசத்தில் கிறீஸ் பூதங்களின் அட்டாகாசம் தலைதூக்கியுள்ள நிலையில் இதுவும் கிறீஸ் பூதங்களின் வேலை தான் என ஒரு தரப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தால் அந்த பிரதேசத்தில் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ள நிலையில், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv