Monday , October 13 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளுடன் நால்வர் கைது

துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளுடன் நால்வர் கைது

பிலியந்தல – ஹெடிகம பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளுடன் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று காலை குறித்த பிரதேசத்தில் கார் ஒன்றினை பரிசோதனை செய்தபோதே குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மொரவக, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த வெடிபொருட்களுடன் 200 கிராம் வெடிமருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv