Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / நாடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

நாடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் இன்று காலை நாடுதிரும்பியுள்ளனர்

இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 8.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டு கடந்த 28 ஆம் திகதி இந்தியா புறப்பட்டார்.

அவருடன் ஜீ.எல். பீரிஸும் இந்தியாவுக்கான விஜயத்தில் இடம்பெற்றிருந்தார்.

சர்­வ­தேச பெளத்த கலா­சார சம்­மே­ளனம் மக­ராஷ்­டிரா மாநி­லத்தில் நடத்திய பெளத்த கலா­சார மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்காகவே அவர் இந்தியாவுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv