Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / பாதுகாப்புக் காரணங்களுக்காக 1,300 வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழையத் தடை!

பாதுகாப்புக் காரணங்களுக்காக 1,300 வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழையத் தடை!

கடந்த வருடம் 1,300க்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் பெரும்பாலானோர் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் சிரிய நாட்டவர்களாவர்.

இந்த நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினர் அனுமதி வழங்கினால் மாத்திரமே குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அவர்களுக்கு விசா வழங்கும்.

2014 ஆம் ஆண்டு முதல் உலகப் பாதுகாப்புக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட சில நாடுகளின் பிரஜைகளுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு விசா கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன.

2016ஆம் ஆண்டில் விசா மறுக்கப்பட்டவர்களில் பின்வரும் நாட்டுப் பிரஜைகள் உள்ளடங்குகின்றனர்.

பாகிஸ்தான் 239; ஆப்கானிஸ்தான் 166; எகிப்து 41; சிரியா 06; இந்தியா 217; சீனா 210; நேபாளம் 78.

2016ஆம் ஆண்டு 2.1 மில்லியன் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்களுள் பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். எட்டு இலட்சம் பேர் ஐரோப்பிய நாட்டவர்கள்.

வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் வழியாகவே நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார்கள். 1,417 பேர் மத்தல விமானநிலையத்தின் வழியாகவும் 26ஆயிரம் பேர் துறைமுகங்கள் வழியாகவும் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார்கள்.

அத்துடன், 14,85,004 இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க வழியாகவும் 845 பேர் மத்தல வழியாகவும் நாடுதிரும்பியிருக்கிறார்கள்.

2016இல் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மொத்தமாக 6,58,725 கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது. அவற்றுள் 401 இராஜதந்திர கடவுச்சீட்டுகளாகும்.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் கடந்த வாரம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்த 2016ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையிலேயே மேற்கூறிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv