Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரி கொலைச் செய்யும் திட்டத்தில் பொன்சேகாவா?

மைத்திரி கொலைச் செய்யும் திட்டத்தில் பொன்சேகாவா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரிமைகளை மீறுகின்றார் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான சரத் பொன்சேகா, ஜனாதிபதியை கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையென்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது என்றார்.

நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், கொலைச்சூழ்ச்சி தொடர்பில் அறிக்கையிடும் போது, மிகவும் கவனமாக அறிக்கையிடவேண்டுமென, ஊடகங்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் சரத் பொன்சேகா தொடர்பில்லை. அவ்வாறான முறைப்பாடுகளும் இல்லை. விசாரணைகளில் அம்பலமாகவும் இல்லை என, குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் (சி.ஐ.டி) பொலிஸ் மா அதிபரும், சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே, நாமல் குமார என்பவர், தன்மீது போலியான குற்றச்சாட்டை முன்வைத்து கொண்டிருக்கின்றார் என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv