Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணில் உற்பட மேலும் சில அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு….!!! மைத்திரியின் அதிரடி

ரணில் உற்பட மேலும் சில அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு….!!! மைத்திரியின் அதிரடி

அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பாலும் மாற்றங்கள் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, மங்கள சமரவீரவின் நிதியமைச்சு, கபீர் ஹரிமின் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, மலிக் சமரவிக்ரமவின் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்களிலும் மாற்றங்கள் நிகழவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த அமைச்சுக்களின் அமைச்சர்கள் மாத்திரமின்றி செயலாளர்களும் மாற்றமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படன. பொருளாதார மேலாண்மையில் தற்போது காணப்படும் பலவீனங்களை சமாளிக்கும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv