Monday , June 10 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / எண்ணெய் கசிவு நிலைமை சீராகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் தேவை – தொல். திருமாவளவன்

எண்ணெய் கசிவு நிலைமை சீராகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் தேவை – தொல். திருமாவளவன்

எண்ணெய் கசிவு நிலைமை சீராகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் தேவை – தொல். திருமாவளவன்

கப்பல் விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் சென்னையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்பகுதியில் எண்ணெய் கழிவு பாதிப்பை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு மேற்கொண்டார். கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை பார்வையிட்ட திருமாவளவன், வாளியில் எண்ணெய் கழிவுகளை அகற்றுவது அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டு 8 நாட்கள் ஆகிவிட்டன. கடற்கரை ஓரங்களில் ஒதுங்கி வரும் எண்ணெய் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டு வருகின்றன.

கடலுக்குள் உள்ள கழிவுகளை எப்படி அகற்றப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. இப்போது எண்ணெய் கழிவுகளால் மீனவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி 1000க்கணக்கான ரூபாய்க்கு மீன்கள் விற்பனையான நிலையில் இப்போது 100 ரூபாய்க்கு மீன்கள் விற்பனையாகவில்லை என்று மீனவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர். இந்த நிலைமை என்றைக்கு சரியாகும் என்று தெரியவில்லை. இது சரியாகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். கடல் ஓரத்தில் ஒதுங்கிய கழிவுகள் டன் கணக்கில் அள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இந்த அளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை வாளியில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுகள் அள்ளப்படுகின்றன. இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் இந்த கழிவுகளை வாளிகளில் அள்ளி வருகின்றனர். மீன்களை சாப்பிடலாமா என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. உடனடியாக நவீன உபகரணங்களை பயன்படுத்தி இந்த கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …