எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பருத்தி துறை பகுதியில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள 20 மீனவர்களும் நாகை, காரைக்கால் பகுதியைச்சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததுடன் தடை செய்யப்பட்ட வலையுடன் மீன் பிடித்ததாக இலங்க கடற்படை குற்றம் சாட்டி, மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களும், காரைநகர் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.