மஹத்தின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. தன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற துணிவில் ஒட்டுமொத்த டீமையும் அடக்க நினைக்கிறார். மும்தாஜை தரக்குறைவாக பேசி முதல் ப்ரோமோவில் பயங்கரம் செய்தார் இரண்டாவது ப்ரோமோ இன்னும் கேவலமாக வெளியாகி உள்ளது . டானி காலையில் மும்தாஜை தாக்க சென்ற மஹத்தை தடுத்து நிறுத்தினார் . அதனை தொடர்ந்து மஹத் டானியலின் மீது முட்டையை ஊற்றுகிறார் . பின் உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டிருக்கும் டானியலிடம் வம்பு இழுக்கும் மஹத் அடித்துக் கொள்ள டானியலை கூப்பிடுகிறார்.
ஏற்கனவே டானியல் தன்னால் முடியாது என்று கூறியிருப்பதால் ஓவராக ஆட்டம் போடும் மஹத் ஒரு கட்டத்தில் கையில் இருக்கும் பொருளை வீசி டானிக்கு அடிக்கிறார் . இதனால் பாலாஜியும் கோபப்படுகிறார். பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருப்பார் பொறுமை என மும்தாஜ் கூற பாலாஜி எவ்வளவு பொறுமையா இருக்கிறது என கத்துகிறார் .
மஹத் மும்தாஜ் அருகில் வந்து ச்சீ போ என கூறுகின்றார். இது தான் இன்று நடக்கிறது உண்மையில் இப்படி நடப்பது சரியா? இந்த முறையும் மஹத்தை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது . டி ஆர் பி வேண்டும் அதனால் மஹத்தை வெளியே அனுப்ப மாட்டார்கள் ஏதாவது இப்போது காரணம் யோசித்து வைத்திருப்பார்கள் . பார்க்கலாம் இன்றைய நிகழ்ச்சியை..!
https://www.facebook.com/VijayTelevision/videos/231942397495261/?t=0