Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வற்றாப்பளைக்கு சென்றவர்களிற்கு நேர்ந்த கதி!

வற்றாப்பளைக்கு சென்றவர்களிற்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்றவர்கள் பளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். வடமராட்சியிலிருந்து வான் ஒன்றில் சென்ற குறித்த நபர்கள் கைக்குண்டு ஒன்றைக் கொண்டு சென்றதன் காரணமாகவே இந்த கைது இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனாலும் போக்குவரத்து விதிமுறையினை மீறியமைக்காக பொலிஸாருக்கும் வானில் சென்றவர்களுக்குமிடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதன்காரணமாகவே குறித்த நபர்களைப் பழிவாங்குவதற்காக பொலிஸார் தாமே கைக்குண்டை வைத்துவிட்டு கைதுசெய்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொலிஸாரின் இந்த திட்டமிட்ட செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களின் வீடுகள் வடமராட்சியில் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv