கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.
கியூபாவில் 104 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து காரணமாக உடனடியாக விரைந்துள்ள தீயணப்பு படையினர், விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.
சம்பவத்தை அறிந்த கியூபா ஜனாதிபதி Miguel Diaz-Canel அங்கு விரைந்துள்ளதாகவும் விபத்தை நேரில் கண்ட அவர் பலியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறியதாகவும், ஆனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அங்கிருக்கும் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று, விபத்தில் சிக்கியவர்களில் மூன்று பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாகவும், பலர் மோசமான நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.