Saturday , November 16 2024
Home / முக்கிய செய்திகள் / ஜீ.எஸ்.பி. இலங்கைக்கு மீண்டும் கிடைக்குமா? – இன்று வாக்கெடுப்பு

ஜீ.எஸ்.பி. இலங்கைக்கு மீண்டும் கிடைக்குமா? – இன்று வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச்சலுகையான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மிக மோசமான மனித உரிமை மீறல்களால் இழந்த இவ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களை சந்தித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்கக் கூடாது என அண்மையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தீர்மானம் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv