Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்!

வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்!

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்!

கடந்த மூன்று நாட்களாக நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் வவுனியாவிலும் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரசியல் வாதிகளோ, அதிகாரிகளோ மக்களின் நலன் கருதி தமது சேவையினை ஆரம்பிப்பதற்காக தமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்வோம் என தெரிவிக்கவில்லை எனவும் தம்மை சந்தித்து கலந்துரையாடவில்லை எனவும் தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் டயர்களை போட்டு எரித்துள்ளனர்.

இதன்பொது தமது சம்பளத்தினை அதிகரி, ஒப்பந்த வேலையாட்களை நிரந்தராமாக்கு என்ற கோசங்களையும் அவர்கள் எழுப்பியிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதோடு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தமது சாலையின் முன் வாயிலில் கட்டியுள்ள இ.போ.ச ஊழியர்கள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தமது போராட்டத்தின் வடிவம் மாறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

தொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும் - ஜனாதிபதி

தொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும் – ஜனாதிபதி

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page