Friday , March 29 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்

சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்

சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்

சரணடைய 4 வாரம் அவகாசம் கேட்டு சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என அவர் காரணம் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூன்று பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் உடனடியாக சரனடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தீர்ப்பை ஏற்கிறோம். அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால் கட்சிப் பணிகள் இருக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லை என்பதால் உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். ஆகையால் 4 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு பிற்பகலுக்கு பின் விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

 

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …