Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமெரிக்காவிலிருந்து சிறிசேனவிற்கு வந்த அவசர கடிதம்.!

அமெரிக்காவிலிருந்து சிறிசேனவிற்கு வந்த அவசர கடிதம்.!

இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் குறிப்பிட்ட உடன்படிக்கை வெளிப்படையானது இலங்கை மக்களிற்கு ஜனாதிபதி வழங்கமுயலும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா வெளிப்படையான இணைப்பினை பேணவிரும்புகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

40 வருடகால அரசியல் அனுபவமுள்ள இலங்கை ஜனாதிபதிக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முதலீடுகள் குறித்து நன்கு தெரிந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv